திங்கள், 15 அக்டோபர், 2012

உலகிலுள்ள அபூர்வமான இடங்கள்(படங்கள் உள்ளே )


உலகிலுள்ள அபூர்வமான இடங்கள்(படங்கள் உள்ளே )

எல்லோருக்கும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கு பிடித்த, சற்று வித்தியாசமான இடங்களைத் தான் பார்க்க விரும்புவோம். அத்தகைய வித்தியாசமான சுற்றுலாத்தளங்களில், அவ்வப்போது இயற்கைக்குப் புறம்பாக நடந்த விபத்துக்களில் ஒரு சில இடங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் மாறியுள்ளது. இப்போது அத்தகைய இடங்களில் ஒரு 5 அபூர்வமான இடங்களைப் பற்றி பார்ப்போமா!!!

                                                                                    
                                                                                                      எரிமலைக் குளம்
minnel,athisayam,Pamukklae
இந்த குளம் இயற்கைப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசமான இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் பம்முக்ளே (Pamukklae) என்னும் இடத்தில், எரிமலையின் வெடிப்புகள் காரணமாக நீரூற்று ஏற்பட்டு, அதன் பக்கவாட்டில் கால்சியம் கார்பனேட் அதிக அளவு சேர்ந்து குளம் போல் உருவாக்கியுள்ளது. இந்த குளத்திற்கு ட்ரேவெர்டின் குளம் (Travertine Pool) என்று பெயர். மேலும் இந்த குளம் சற்று சரிவாக படிக்கட்டுகள் போன்று அமைந்துள்ளது.



                                                                                   புள்ளி புள்ளியாக காணப்படும் ஏரி
saline alkali lake,minnel,puthumai
இந்த சலைன் அல்கலி ஏரி (saline alkali lake) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒசொயூஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரில் 8-10 கனிமங்கள் உள்ளன. இதனால் கோடை காலத்தில் இங்கு தண்ணீர் ஆவியாகி, அந்த கனிமங்களுடன் சேர்ந்து, நீரின் மேற்பரப்பில் புள்ளிப் போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. இதனால் அந்த ஏரி பார்க்க ஓட்டை ஓட்டையாக இருப்பது போன்று காணப்படும்.



                                                                                    கற்கள் தானாக நகரும்  இடம்
Racetrack Playa,minnel
இந்த இடத்திற்கு ரேஸ்ட்ராக் பால்யா (Racetrack Playa) என்று பெயர். இது கலிபோர்னியாலிவல் உள்ள ஒரு வறண்ட ஏரி என்றாலும், கண்ணுக்கினிய ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால், இந்த இடத்தில் இருக்கும் கற்கள் தானாக நகர்கிறது என்பது தான். மேலும் அவ்வாறு நகரும் கற்கள் நகர்ந்ததற்கான அடையாளத்தோடு நகர்கிறது என்பது தான் இதன் சிறப்பு. அதிலும் இந்த கற்கள் பலத்த காற்றின் காரணமாக நகர்கிறது என்பது உண்மை. அப்படியெனில் எந்த அளவு காற்றடிக்கும் என்று யோசித்து பாருங்களேன்


                                                                                     சஹாரா பாலைவனம்
Richat Structure,minnel.viyappu
உலகில் உள்ள வித்தியாசமான இடங்களில் சஹாரா பாலைவனத்தில் உள்ள ரிச்சட் வடிவம் (Richat Structure) ஒன்று. சொல்லப்போனால், அதை சஹாராவின் கண் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த இடத்தின் அமைப்பு பரந்த, விரிந்த பாலைவனத்தில் வண்ணமயமாக இருப்பதோடு, மேலும் பார்த்தால் கண்கள் சலிக்காமல் பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது....



                                                                                    வித்தியாசமான தீவு
Socotra Islands,minnel,minnal
இந்த பூமியில் இருக்கும் தீவுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சோகோட்ரா தீவு (Socotra Islands) ஒரு புதிரான இடம். ஏனெனில் இந்த தீவுகளில் உள்ள அனைத்து மரங்களும், விலங்குகளும் வித்தியாசமான வடிவத்தோடு காணப்படும். இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை எங்கும் காண முடியாது என்பதே இதன் சிறப்பு



இவையே உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதிரான இடங்கள். மேலும் இந்த இடங்கள் உலக சுற்றுலா பயணம் செல்லும் போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஒரு சிறந்த இடங்களாக அமையும்.
10:37 am | 2 கருத்துகள் | Read More

நடிகை ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்

actress srithevi


அன்றைய காலத்தில் கோடி கட்டிப் பறந்த புகழ் மிக்க நடிகைகளுள் ஸ்ரீதேவியும் ஒருவர்.தமிழ்நாட்டில் சிவகாசியில் பிறந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. 13   ஆகஸ்ட்  1963 இல் பிறந்த இவர் தமிழ்,மலையாளம் ,ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி களிலான திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.  நீங்கள் அவரது  ஏராளமான புகைப்படங்களை பார்த்திருப்பினும் இங்குள்ள படங்கள் அவரது இளமைகாலத்தின் ஆரிய புகைப்படங்களாகும்




9:56 pm | 0 கருத்துகள் | Read More

ராய்ட்டரின் சிறந்த செய்திப் படங்கள்.

amazing-fun-padam
வார்த்தைகளால் மட்டும்தான் செய்திகளை வெளியிட முடியும் என்பது என்னைப் பொறுத்த வரையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றே ஆகும்.புகைப்படங்கள் , ஓவியங்கள் ,போன்ற இதர ஊடகங்கள் மூலமாகவும் செய்திகளை பிறருக்கு தெரிவிக்க முடியும்.

படிக்காத பாமர மக்களால் கூட இலகுவாக விளங்கிக் கொள்ளகூடிய சர்வதேச ஊடகம் என்றால் அது புகைப்படம்தான். ஆயிரம் சொற்களால் கூறக்கூடிய ஒரு செய்தியை மிக எளிதாக ஒரு புகைப்படம் சொல்லி விடும்.

இங்கே உள்ள படங்களும் உலகெங்கிலும் நடை பெற்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் பிடிக்கப் பட்ட அறிய செய்திப் புகைப்படங்களாகும். நகைச்சுவை, இயற்கை அனர்த்தம், மட்டும் விசேட தருணங்களில்  எடுக்கப் பட்ட புகைப்படங்களாகும்.இப்புகைப படங்கள் உலகின் மிக சிறந்த செய்தி சேவையாக விளங்கும் ராய்ட்டருக்கு உரியனவாகும்







11:40 am | 0 கருத்துகள் | Read More

கொடூரமான கொலை முயற்சி (படங்கள்)


உணவுக் கூம்பகத்திற்கு அமைய எந்தவொரு உயிரினமும் பிற உயிரினத்திற்கு இரையாகின்றமை இயற்கையின் நியதியே. அதற்காக கொடூரமான முறையிலா இரையாக்குவது?


கடற்கரையில் உல்லாசமாக உணவுதேடிக்கொண்டிருந்த தாராக்கள் கூட்டத்தின் உள்ளே புகுந்த கடற்பறவை ஒன்று அழகிய தாராக் குஞ்சு ஒன்றை கொடூரமாக கொலை செய்து தனக்கு இரையாக காவிச் சென்றுவிட்டது. இச்சம்பவமானது கடற்பறவைகள் அதிகளவில் காணப்படும் ஐரோப்பியாவில் இடம்பெற்றுள்ளது......


























அப்படி முறைக்காதீங்க...
3:36 pm | 0 கருத்துகள் | Read More

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக